குதிரை பேரம் வழக்கில் அதிரடி... ரூ.2.80 கோடி சிக்கியது..! புது திருப்பம்..!!
ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார்.
திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக்..! இரட்டை நிலைப்பாடு ஏன்.? சொல்லுங்க CM..! வேல்முருகன் தாக்கு.!
அதற்குள் ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ சரவணன் குதிரை பேரம் நடத்தியது தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், கருணாநிதி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வினோத் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்கும் விவகாரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் ரூ.2.80 கோடியை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: விஷ வண்டு கடித்து உயிரிழந்த பேராசிரியர்...! ஒரு கோடி இழப்பீடு கொடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்.!!