×
 

தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் ஆனந்த் விளக்கம் கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடூரமான சம்பவம் குறித்து புகார் அளித்தார். அவர் விஜயின் தீவிர ரசிகையாகவும் தவெக கட்சிப் பணியில் ஈடுபட்டவராகவும் இருந்தார்.

வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து அழைத்துச் சென்ற கட்சி நிர்வாகிகள் இருவர் அவரை காரில் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். குற்றவாளிகள் அந்தப் பெண்ணை நம்ப வைக்க ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும், சம்பவம் நடந்த பிறகு அந்த எம்எல்ஏ தரப்பில் இருந்து புகாரை வாபஸ் பெறச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அமைச்சர் மூலம் வேலை வாங்கித் தருவதாக சமரசம் பேசப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் இரு நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் எம்எல்ஏ மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்தன. உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் எம்எல்ஏவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்தச் சூழலில் எம்எல்ஏ தனது நிலைப்பாட்டை விளக்கினார். தனக்கு இந்தச் சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் பின்னர் சில தெளிவுபடுத்தல்களை வெளியிட்டதாகவும், முழு விவகாரமும் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

கட்சித் தரப்பில் இந்தச் சம்பவம் கண்டிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.சட்டப்பேரவை அமர்வில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்தார். அரசு எந்த விதமான குற்றச்சாட்டையும் அலட்சியப்படுத்தாது என்றும், சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாருக்கும் சலுகை காட்டப்படாது என்றும் அவர் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசு உறுதியாக செயல்படும் என்பதை அவர் வலியுறுத்தினார். அதேநேரம் அரசியல் ரீதியாக இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். 

 

இதையும் படிங்க: சர்கார் பட சர்ச்சை முதல் அம்மா லேப்டாப் வரை! சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share