×
 
☰

திமுக ஆட்சியில் தொடங்கிய திட்டத்தின் டெண்டர் ரத்து..! தவெக அரசு எடுத்த முக்கிய முடிவு..!

திமுக ஆட்சியில் வெளியான டென்டரை தமிழக வெற்றிக்கான அரசு ரத்து செய்து உள்ளது.

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கான டெண்டர், தற்போதைய தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்களை அமைப்பதற்காக அழைக்கப்பட்ட இந்த டெண்டர், நிர்வாகக் காரணங்களைக் காட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் வசதிக்காக திட்டமிடப்பட்ட ஒரு முயற்சியாகும்.மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துவதோடு, நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது. முதல் கட்டமாக ஏழு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் இந்த மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டது. அந்த இடங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அய்யன் கோவில்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பழங்கரை, திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பாச்சூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் கலந்தரா, சேலம் மாவட்டத்தில் காரிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்மட்டை ஆகியவை ஆகும்.

இந்த சாலையோர வசதி மையங்களில் ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், காற்று நிரப்பும் வசதிகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகள், உணவகங்கள், கழிவறை வசதிகள், சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், வாகனங்களுக்கான அவசரகால மெக்கானிக் சேவை, முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் தேநீர் கடைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற இருந்தன. தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டது. அரசு நிலத்தை மாநில நெடுஞ்சாலை ஆணையம் வழங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அங்கு கட்டமைப்புகளை உருவாக்கி மையங்களை இயக்க வேண்டும். ஆண்டுதோறும் குத்தகை கட்டணம் செலுத்தும் விதிமுறையும் வகுக்கப்பட்டிருந்தது.இந்த திட்டம் வாகன ஓட்டிகளின் சோர்வை குறைத்து, பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நீண்ட தூர சாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏற்படும் சிரமங்களைப் போக்கும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த டெண்டர் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

இதையும் படிங்க: 4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share