×
 

"சட்டம் ஒழுங்கில் ஆமை வேகம்"..! கோட்டை விடாதீங்க CM..! வானதி சீனிவாசன் விளாசல்..!!

சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த வானதி சீனிவாசன் முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் என்பவரை மர்ம நபர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக முன்னாள் அமைச்சர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் போதைக் கலாச்சாரம், மறுபுறம் அரிவாள் கலாச்சாரம் என தூய சக்தி எனக் கூறும் தவெக ஆட்சியில் தமிழகமே குற்றங்களில் திளைத்து வருவது சட்டம் ஒழுங்கு செயல்பாட்டின் மோசமான நிலையைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். கோட்டையைப் பிடிக்க காட்டிய வேகத்தை கொஞ்சம் சட்டம் ஒழுங்கு சீர்செய்வதிலும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

கடந்த வாரமும் இதேபோல் கோவை கிணத்துக்கடவு பகுதியில் இளைஞரை, இருவர் கொலை செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது தமிழக காவல் துறை சமூக விரோதிகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த தவறியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!

ஆட்சியிலிருக்கும் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தான் காலதாமதம் செய்கிறது என்று கூறிய வானதி சீனிவாசன், ஆனால் குறைந்தபட்சம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிலாவது வேகம் காட்டும் என்று பார்த்தால் அதிலும் ஆமை வேகமே என்றார். கோட்டையைப் பிடிக்க காட்டிய வேகத்தை கொஞ்சம் சட்டம் ஒழுங்கு சீர்செய்வதிலும் காட்டுங்க என்று முதலமைச்சர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share