×
 
☰

மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று கூறியதற்கு மெட்ரோ பள்ளத்திலும் போதைப்பொருள் வளர்ச்சியிலும் பொறுப்பேற்பாரா என தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களிலும் திமுகவின் பெயரே நிலைத்து நிற்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து திமுக தலைவர் வெளியிட்டிருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய தவெக ஐடி விங், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று கூறியிருக்கும் Dummy Daddy, மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தின் வளர்ச்சியிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாடெங்கும் பரவி வேரூன்றியிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தின் வளர்ச்சியிலும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று வெளிப்படையாகப் பொறுப்பேற்பாரா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், எல்லாவற்றிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் நபர்களால், வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் தமிழக மக்களுக்கு ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சியை வழங்கி வருகிறார் என்று மக்கள் பாராட்டுவதற்கு மட்டும் என்றுமே ஸ்டிக்கர் ஒட்ட முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

அத்துடன், மு.க. ஸ்டாலினின் அறிக்கையை மறைமுகமாகக் கிண்டலடிக்கும் விதமாக, மற்றும் பலர் செய்த ஆட்சி லட்சணத்திற்குத்தான் தமிழக மக்கள் 13 முறை நற்தீர்ப்பளித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்' என்ற தகவலைத் தங்களின் கொல்லைப்புறக் கூட்டணி வாட்ஸ்அப் குழுவில் ஃபார்வர்டு செய்து விடுங்கள் 'Sweet Uncle' என்றும் எள்ளிநகையாடியுள்ளது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தங்களது சாதனையாக உரிமை கொண்டாடிய திமுக தலைவரின் அறிக்கைக்கு எதிராகத் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொடுத்துள்ள இந்த காரசாரமான சமூக வலைதளப் பதிவு, தமிழக அரசியல் அரங்கிலும் இணையதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசியலில் புதிய பயணம்..!! திமுகவில் இணைந்தார் திருப்பூர் எம்.பி சுப்பராயனின் மகன் பாரதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share