×
 

தவெக மாநாட்டில் இரவோடு, இரவாக நடந்த அதிரடி மாற்றம்... கதறப்போகும் திமுக, அதிமுக...!

இந்த மாநாட்டு திடலில் “வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம்பெற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் பிரம்மாண்டமாக நடந்துள்ளன. இந்த மாநாட்டு திடலில் “வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம்பெற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இதுவரை இல்லாத வகையில் தமிழக வெற்றிக்கழத்தின் மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் கொள்கை தலைவர்களாக தந்தை,பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி வந்த விஜய், தற்போது திமுக, அதிமுகவின் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியிருந்தனர்.

விஜய் முதன் முறையாக கட்சி ஆரம்பித்தபோது கொள்கை பாடல் மற்றும் கொள்கை தலைவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. அப்போது தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியன் கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு பிறகு கொள்கை பாடல்கள் வெளியிட்டபோது ஆரம்பத்தில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் நிழல் படங்கள் மட்டுமே இடம்பெற்றது. அதாவது நேரடியாக அவர்களது உருவங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நிழல் போல கருப்பு வண்ணத்தில் யன்படுத்தப்பட்டது.  இந்த நிலையில் மதுரை மாநாட்டில் முகப்பில் விஜய்க்கு இருபுறமும் அண்ணாவும் எம்ஜிஆரும் இருப்பது போன்ற புகைப்படம் மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: “விஜய் எங்க வீட்டுப்பிள்ளை தான் ஆனா...” விஜயகாந்த் போட்டே விவகாரத்தில் பிரேமலதா மீண்டும் கறார்...!

 திமுக, அதிமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த விஜய், தற்போது திமுகவின் நிறுவனரான அண்ணா மற்றும் அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை பயன்படுத்தியிருப்பதை இரண்டு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில் இரவோடு, இரவாக மேடை கட் அவுட் முகப்பில் இருந்த  அண்ணா மற்றும் எம்.ஜி.ஆருடன் விஜய் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த புகைப்படத்தின் அளவு சிறியதாக இருந்ததாக கூறி, அதன் அளவை பெரிதாக மாற்றி வைத்துள்ளனர். தங்களது தலைவர்களின் படங்களை விஜய் எப்படி பயன்படுத்தலாம் என திமுகவும், அதிமுகவும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தவெக அந்த போட்டோவை பெரிதாக வைத்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share