×
 

தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!

தவெக மாநாட்டில என்னென்ன விஷயங்கள் தடை செய்யப்பட்டிருக்கு? தொண்டர்களுக்கு கட்சி வழங்கி இருக்கக்கூடிய அறிவுறுத்தல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

 தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மதுரை பாரபத்தியில நடைபெற்று வருகிறது. தவெக கட்சி தலைவர் விஜய் சாலை மார்க்கமா மதுரை சென்றடைந்துள்ளார். அவரை வரவேற்க தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒரு பக்கம் தயாராகி வருகின்றனர். தவெகவுடைய முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து. இதில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 3000 போலீசார் வரைக்கும் பாதுகாப்பு பணியிலயும் ஈடுபட்டிருந்தாங்க. எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகமானதால் பலர் இண்ணல்களுக்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி மாநாட்டை பார்க்க வந்த ஒரு சில இளைஞர்கள் விபத்தில உயிரிழந்தோருந்தாங்க. இன்னும் பல பேரு போக்குவரத்து நெரிசல் சிக்கி அவதி அடைந்தனர். 

இந்த மாதிரியான பிரச்சனைகள் எல்லாத்தையும் தவிர்க்கவும், மாநாட்டுக்கு வரக்கூடிய தொண்டர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பதற்காகவும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாநாட்டிற்கு வருபவர்களுக்காக சில வழிகாட்டு நெறிமுறைகளையும், தடையும் விதிச்சிருக்காங்க. மதுரையில் கிட்டத்தட்ட 506 பரப்பளவுல இடம் தேர்வு செய்யப்பட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் வரைக்கும் மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு வருபவர்களின் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்பதில் இந்த முறை அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதில் முதல் விஷயமாக,  மாநாட்டுக்கு வரவங்க முன்புற பகுதியில் இருக்கிற ஏழு வழிகளில் மட்டும்தான் மாநாட்டினுடைய பந்தலுக்குள்ள வர வேண்டும் என்ற விதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, விஜய் பேச இருக்கக்கூடிய மேடைக்கு அருகில் இரண்டாவது வரிசையில் என்ன பண்ணி இருக்காங்கன்னா, ரெண்டு பெட்டிகளை பெண்கள் மட்டும் அமர்வதற்காக ஒதுக்கீடும் செஞ்சிருக்காங்க. 

அடுத்ததாக இருசக்கர வாகனங்களை மாநாட்டுக்கு யாரும் வர வேணாம் அப்படின்னு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருக்காங்க. தொடர்ந்து இது மட்டுமின்றி கேமராக்கள்ல வீடியோல்லாம் எடுக்க வேணாம் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒருவேளை ஏதேனும் அவசரம் ஏற்பட்டால்,  மாநாட்டினுடைய திடல்ல இரண்டு பக்கத்திலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கான சிறப்பு வழிக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கு. தொடர்ந்து மாநாட்டில கலந்து கொள்கிறவர்கள் யாருக்காவது தலை சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சுவலி போன்ற ஏதாவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க 10 மருத்துவ சிகிச்சை முகாம்கல் அமைக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: 100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

தொடர்ந்து மாநாட்டில் உள்ள பாதுகாவலர்களிடம் யாரும் வக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இது மட்டும் இல்ல ஒருவேளை மாநாட்டு திடலுக்கு வருபவர்கள் அங்குள்ள அறிவிப்பு பலகையை முறையா பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.  யாரும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதை தவிர்க்கணும் என்றும், தயவு செய்து மாநாட்டுக்கு வரும்பொழுது மது அருந்திட்டு வராதீங்க என்ற வேண்டுகோளையும் தவெக சார்பில் வச்சியிருக்காங்க. அதிவேகமாக வரக்கூடாது. போக்குவரத்து விதிகளை மதிச்சு மாநாட்டிற்கு வரணும் அப்படின்னு இன்னொரு கோரிக்கையும் வச்சிருக்காங்க. 

அவசர தேவை எதனால் ஏற்பட்டுருச்சு அப்படின்னா மாநாட்டை சுற்றி அமைக்க இருக்கக்கூடிய இந்த தடுப்பு சுவர் அது வந்து நாங்க அகற்றிடுவோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. இப்போதைக்கு அங்க தடுப்பு சுவர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. தொடர்ந்து மாநாட்டை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகள்ல பட்டாசு வெடிக்க தடை விதிச்சிருக்காங்க. யாரும் பட்டாசு வெடிக்க வேணாம். அதனால எந்த அசம்பாவிதம் ஏற்பட வேணாம்னு சொல்லி இந்த மாதிரி பல வழிகாட்டு நெறிமுறைகளை நாளைக்கு நடக்க இருக்கக்கூடிய தவெக மாநாட்டிற்காக கட்சி தலைமை வெளியிட்டிருக்கு. 
 

இதையும் படிங்க: 100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share