விறுவிறு தேர்தல் களம்..! அருண் ராஜ் தலைமையில் TVK தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம்..!
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு முக்கிய அங்கமாக, கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கென சிறப்புக் குழு ஒன்றை கட்சித் தலைவர் தளபதி விஜய் ஜனவரி 9 அன்று அமைத்து அறிவித்தார். இந்தக் குழு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு மற்றும் குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நேரடியாகச் சென்று கருத்துகளையும் தேவைகளையும் சேகரிக்கும் பணியை இக்குழு மேற்கொள்ள உள்ளது.
இவ்வாறு பெறப்படும் தரவுகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், மக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படவுள்ளது. இக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் கட்சியின் கொள்கை மற்றும் பிரச்சாரப் பொதுச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், துணைப் பொதுச் செயலாளர் ஏ. ராஜ்மோகன் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மற்ற உறுப்பினர்களாக டி.எஸ்.கே. மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது பர்வேஸ், டி.கே. பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, எம். சத்யகுமார் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெண் எரித்துக் கொலை..! செயலிழந்து கிடக்கும் திமுக அரசு.. TVK கடும் கண்டனம்..!
இந்தக் குழு தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு கருத்துகளைத் திரட்ட உள்ளது. இதனிடையே, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அருண் ராஜ் தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். எந்தெந்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்தும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் கிட்ட பேசிக்கலாம் கம்முனு இருங்க... காரை வழிமறித்த நிர்வாகிகளை அமைதிப் படுத்திய நிர்மல் குமார்...!