யாருடன் கூட்டணி? நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... முக்கிய ஆலோசனை...!
நாளை தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியதில் இருந்து அவரது பொதுக்கூட்டங்களும் மாநாடுகளும் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. விக்கிரவாண்டி முதல் மாநாடு, மதுரை இரண்டாவது மாநாடு, ஈரோடு, திருச்சி, புதுச்சேரி போன்ற இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தக் கூட்டங்கள் அனைத்தும் வெறும் ரசிகர்கள் மட்டுமே என்றும், இது ஓட்டாக மாறாது என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
விஜயின் அரசியல் பிரவேசம் தொடங்கிய காலத்திலிருந்தே அவரது ரசிகர் பட்டாளமே அவரது மிகப்பெரிய பலமாகக் கருதப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. தமிழக வெற்றி கழகமும் தேர்தல் பணிகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. மாநாடுகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், செயற்குழு கூட்டம், ஆலோசனைக் கூட்டங்கள் என பலவகையான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாகவும் மக்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பது தொடர்பாகவும் தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அரசியலின் புதிய அலையாக இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொறுப்பாளர்களை நியமிப்பதில் விஜய் தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஸ்ட்ரோக்- ல ஆட்சிக்கு வருவாராம்... நடக்குற காரியமா? விஜயை வறுத்தெடுத்த திருமா..!
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை குழு, தேர்தல் வாக்குறுதி குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: “தெனாவெட்டு பேச்சு... மொத்தமும் போச்சு”... பேரதிர்ச்சியில் விஜய்... கண்ணீர் கடலில் தத்தளிக்கும் தவெக...!