நாளை தவெக சென்னை மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம்..! தலைமைக் கழகம் அறிவிப்பு..! முழு விவரம்..!
தவெக சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய கட்சி. விஜய் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக திரைத்துறையை விடுவதாகவும் அறிவித்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது. கட்சியின் தொடக்கத்திலிருந்தே, விஜய் தனது ரசிகர்களின் ஆதரவை அரசியல் சக்தியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏற்கனவே சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியதே தமிழக வெற்றிக் கழகம். மாநாடுகள், பிரச்சாரம், மக்கள் சந்திப்பு என தேர்தல் வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
கட்சியை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: விசில் போடு..! TVK தேர்தல் பிரச்சாரம் நாளை தொடக்கம்..! பிரச்சார குழு தீவிரம்..!
நாளை மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கழகச் செயல்வீரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: திருமா. திமுகவின் அடியாள்..! ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்த விசிகவினர்..! கொந்தளிப்பு..!