×
 

இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் இல்ல 20 ரூபாய்... விஜய் சி.எம். ஆன முதல் நாளே டாஸ்மாக்கில் திடீர் மாற்றம்... ஷாக்கான தவெக நிர்வாகி...!

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகம் விற்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 24 மணி நேரமும் தெருக்களில் விற்கப்படும் மதுபானம், மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 கூடுதலாக விற்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் புகார். 

 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும், மதுபான விற்பனை கட்டுப்படுத்தப்படும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது ஒழுங்குமுறை படுத்தப்படும் என அறிவித்திருந்தார். 

இந்நிலையில் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு மதுபான கடைகளில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் அரசு நிர்ணயத்த விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக மதுபானம் விற்கப்படுவதாகவும், அதேபோல் தெருக்களில் உள்ள பெட்டிக்கடைகளில் 24 மணி நேரமும் சில்லறையில் மதுபானம் விற்கப்படுவதாகவும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்.

இதையும் படிங்க: #BREAKING: சபாநாயகர் ஆகிறார் ஜேசிடி பிரபாகர்..! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!!

இதுகுறித்து அரசு மதுபான கடைகளில் கேட்டால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று யாரிடம் வேண்டுமெனாலும் சென்று புகார் கொடுக்கலாம் என கூறுவதாக தமிழக வெற்றி கழகத்தின் பட்டிவீரன்பட்டியின் பேரூர் கழக தலைவர் விக்னேஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் தொழிற்சங்க உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் இன்று 11.05.26 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபீடம் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த முதல்வர் விஜய்..! ஆரத்தழுவி வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share