×
 

அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

காவல் நிலையத்திற்குள்ளே வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட தவெகவினர். கண்டுகொள்ளாத காவல்துறையினர் - பொதுமக்கள் முகம்சுழிப்பு.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகள், குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கி வருகின்றனர்.

அவர்களைப் போல் ஆய்வு நடத்துகிறேன் என்ற பெயரில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் கையில் கேமராவுடன் தவெக நிர்வாகிகள் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதி அல்லாத தவெகவினர், அரசு விவகாரங்களில் தலையிடுவது மக்களிடையே கடும் அதிருப்தியையும், அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. 

இதனையடுத்து மக்கள் பிரதிநிதி அல்லாதவர்கள், அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தவெக பொதுச் செயலாளரும். அமைச்சருமான என்.ஆனந்த் கோரிக்கை விடுத்தார். அதன்பிறகும் தவெக தொண்டர்கள் அரசு அலுவலகங்களில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்கள் தடுக்கும் நோக்கில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி  நடைபெற்றது.பொங்கலூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தவெக பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்  ராம்குமார்,மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அங்கு வந்த தவெக கட்சியினர் காவல்நிலையத்திற்குள்ளே தவெக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் போலீசாருடன் அமர்ந்து உரையாடுவது போல் வீடியோ எடுத்து அதனை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக காவல் நிலையத்திற்குள் சென்று தவெக கட்சியினர் அத்துமீறி வீடியோ பதிவை செய்ததாகவும் இதனை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் இதுபோல சம்பவங்கள் இனி தொடர் கதையாகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share