விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!
மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் உரையாற்றினார்.
தமிழக அரசியலில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். நான்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் அதிமுகவின் 15 நகரச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர் என ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!
தவெகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்த நிகழ்வில் அமைச்சர் என்.ஆனந்த் உரையாற்றினார். அப்போது, பதவி வர பணிவு முக்கியம் என்றும் அந்த பணிவை முதல்வர் விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் தவெக உறுப்பினர்கள்தான் 100% வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளார். கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் தவெகவில் உள்ள தோழர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முதல்வரை நம்பி வந்தவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை என்றும் வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அங்கு மூன்று சிங்கங்கள் இருக்கு என்றும் புதுக்கோட்டையிலும் 2 சிங்கங்கள் இருக்கு எனவும் கூறியுள்ளார். தவெக துண்டுடன் உங்கள் முகம் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள அவர், அதனால், இங்கிருப்பவர்களில் 75% பேர் விசில் சின்னத்துக்குத்தான் ஓட்டு போட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?