ஆபாசம், அவதூறு, மிரட்டல்...! இதான் திமுக..! அமைச்சர் ரமேஷ் ஆவேசம்..!!
திமுகவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தமிழக அரசியல் களத்தில் நடைபெறும் சில செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசியபோது, ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு மற்றும் மிரட்டல் போன்றவற்றை அரசியல் ஆயுதங்களாகக் கருதி செயல்படும் கட்சி தமிழகத்தில் திமுகவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக முன்பு இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும் பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அவரது அரசியல் தரத்தைத் தொடர்ந்து வெளிப்படையாகக் காட்டுகிறது என்று அமைச்சர் ரமேஷ் கூறினார். அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தைக் காட்டுவதற்கான பதவி அல்ல என்றும், அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்றும், அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிடக் கீழே இறங்கிப் பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல என்றும், மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?
எனவே வார்த்தைகளை அளந்து பேசட்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார். அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றாலும், அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால் அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!