×
 

#BREAKING கையை முறுக்கி ஆவேசம்... தவெக எம்.எல்.ஏ. தாக்கியதில் செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

தவெக எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் செய்தியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் செய்தியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை சோளிங்கர் எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தி சேகரிச் சென்ற செய்தியாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நியூஸ் தமிழ் செய்தியாளர் அரங்கநாதன் உள்ளிட்ட செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ. கபில் செய்தியாளர்களைத் தாக்கியதை செல்போனில் படம் எடுத்தவர்களையும் எம்.எல்.ஏ. கபிலின் தம்பியும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போனை பறிந்து அதில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்துள்ளனர். 

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து சக செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களை கையை முறுக்கி அடித்த தவெக எம்.எல்.ஏ. கபில், அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு முன்னதாக ஜனநாயகன் பட வெளியீட்டின் போது யூ-டியூப்பர் ஒருவரையும் எம்.எல்.ஏ. கபில் அடிக்க பாய்ந்துள்ளார். ஜனநாயகன் படம் குறித்து எழுந்த தகராறில் யு-டியூப்பரை எம்.எல்.ஏ. அடிக்க பாய்ந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட யு-டியூப்பரிடம் விளையாட்டாக தான் கை ஓங்கியதாக செய்தி வெளியிடும் படி எம்.எல்.ஏ. கபில் கேட்டிருக்கிறார்.

இதற்கு யு-டியூப்பர் மறுக்கவே மீண்டும் அவரை அடித்துள்ளார். யு-டியூப்பரை எம்.எல்.ஏ. கபில் தாக்கும் காட்சிகளை அங்கிருந்த செய்தியாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது தன்னை வீடியோ பதிவு செய்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் அரங்கநாதன் உள்ளிட்ட மீது எம்.எல்.ஏ. கபில் கையை முறுக்கிக் கொண்டு அடிக்க பாய்ந்துள்ளார். உடனே அங்கிருந்த அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை தாக்கியதோடு, செல்போன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் இரவு நேரத்தில் சாலையில் அமந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

இதையும் படிங்க: #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

இதையும் படிங்க: நடிக்குறாங்க... DMK ஆல்ஃபா கொரோனா... TVK பீட்டா கொரோனா..! இன்பதுரை விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share