வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!
குதிரை பேரம் தொடர்பான ஆதாரத்தை தவெக MLA சரவணன் வெளியிட்டார்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 10 முதல் 15 தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் இடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது என்பது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைமை விசாரித்து வருவதாக கூறப்பட்டது
இந்த நிலையில், தன்னிடம் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் ஆதாரத்தோடு வெளியிட்டு உள்ளார். திமுகவில் இணைய 50 கோடி ரூபாய் வரை தருவதாக தன்னிடம் பேரம் பேசினார்கள் என்று கூறியுள்ளார். பேரம் பேசியதற்கான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட சரவணன் பேரம் பேசியவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!
பேரத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் தன்னை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆடியோ ஆதாரத்தையும் பேரம் பேசியவரின் புகைப்படத்தையும் எம் எல் ஏ சரவணன் வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு டெல்லி மறைமுக சப்போர்ட்!? தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காததன் பின்னணி?!