×
 
☰

தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ. மீது கல் வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, தொழில்துறை முதலீடுகளில் தடை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நாகம்மநாயக்கன்பாளையத்தில் குட்டையைத் தூர்வாரி, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பும் அரசுத் திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வரும் மக்கள், இன்று நடைபெற்ற தொடக்க விழாவிலும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் இன்று காலை அப்பகுதிக்குச் சென்றார். அப்போது பொதுமக்கள் அவரது வாகனத்தைச் சுற்றி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எம்.எல்.ஏ. சுகுமார் பின்வாங்காமல் கட்சிப் பணியாளர்கள் முன்னிலையில் குட்டையைத் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை நிறைவேற்றினார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ. மீது கல் வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி.. தவெக வீழ்ச்சிக்கு இடைத்தேர்தலே தொடக்கம்: உதயநிதி ஆவேசம்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. சுகுமார், “நீர்வழிப்பாதையில் உள்ள குட்டையைத் தூர்வாருவதுதான் திட்டம். சுத்திகரிக்கப்பட்ட நீரை விடுவதால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மழைக்காலத்திலும் நீர் தேக்கப்படும். சிலர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும்” என்றார். 

மேலும் அவர், “சூலூரில் ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. அதிக போர்வெல்கள் நிலத்தைப் பாதிக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே விடப்படும்; கழிவுநீர் விடப்படாது. பல மாநிலங்களில் இத்தகைய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வட மாநிலங்களில் இது மினரல் வாட்டர் போல விற்கப்படுகிறது. சூலூரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட நீரும் அதே தரத்தில் இருக்கும். பிளாஸ்டிக்கு எதிரான போராட்டமாக இருந்திருந்தால் வரவேற்றிருப்பேன். 

நான் யாரிடமும் பணம் வாங்கியதாக நிரூபிக்கட்டும். என்னை திருடன் என்று சொல்பவர்களை அழைத்து வாருங்கள். நொய்யலில் கழிவு கலப்பவர்களிடம் கேளுங்கள். முந்தைய ஆட்சியாளர்கள் பணம் வாங்கியும் இதைச் செய்யவில்லை. நான்கு மாதங்களில் நாங்கள் எவ்வளவு செய்ய முடியும்?” என தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்களின் அதிருப்தியையும், அரசின் திட்டங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாய் கிழிய வசனம் பேசிய முதல்வர் எங்கே.? சிங்கத்தின் படை என்னாச்சு.? உதயநிதி சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share