தவெகவில் ஐக்கியமான VIP-க்கள்..! அரசியலில் ஜெட் வேகத்தில் பறக்கும் விஜய்..!
முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ்க்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட பலர் இணைந்துள்ளனர். முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜலட்சுமி, ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வன், முன்னாள் நீதிபதி சுபாஷ், மரிய வில்சன் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: #2026ELECTION: மக்களை சந்திக்கும் விஜய்.. அனல் பறக்கும் தேர்தல் களம்..!
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி K.G. அருண்ராஜ் கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் ஆரம்ப அமைப்பு பணிகளில் அருண்ராஜ் முக்கிய ஆலோசகராக செயல்பட்டதாகவும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதில் அவரது அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. அருண்ராஜ், 2025 மே 22 அன்று தனது ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்கள் இளைய காமராஜரே..! விஜயை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்த மாணவி..!