×
 

"தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்  தேர்தல் பணிமனை மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பணிமனை சில மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறைச் செயலுக்குத் தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, "ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக தேர்தல் அலுவலகம் சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாற்றுக் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயமே இத்தகைய கீழ்த்தரமான செயல்களுக்குக் காரணம் என்பது கண்கூடாகத் தெரிகிறது" என்று சாடியுள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியாகக் களத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள், வன்முறை மூலம் கட்சியின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என எண்ணுவதாகவும், இத்தகைய அச்சுறுத்தல்களுக்குத் தவெக தொண்டர்கள் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தல் களத்தில் கால் பதித்துள்ள நிலையில், அக்கட்சியின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் திருச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதி தவெக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: மத நல்லிணக்க பயணம்: திருச்சியில் மாற்றுத்திறனாளி சிறுவனை மகிழ்வித்த தவெக தலைவர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share