"திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!
ஜி எஸ் டி விவகாரத்தை சுட்டிக்காட்டி திமுகவை தமிழக வெற்றிக்கழகம் விமர்சனம் செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கருத்தில், ஜிஎஸ்டி வருவாயைக் குறித்து திமுகவினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் குறித்து கடும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக திமுகவினர் “ஜிஎஸ்டி 5 சதவீதம் சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்ற வகையில் அரைவேக்காட்டு பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் அந்தப் பிரச்சாரத்தின் உண்மை முகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தமிழக வெற்றிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிராஸ் ஜிஎஸ்ட் எண்ணிக்கையை மட்டும் முன்னிலைப்படுத்தி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளதாக கட்சி கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் போஸ்ட்-செட்டில்மென்ட் ஜிஎஸ்டி வருவாய் 16.1 சதவீதம் உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார். இது திமுகவினரின் கூற்றுக்கு முரணாக அமைந்துள்ளது.
இப்படி உண்மையான வருவாய் உயர்ந்துள்ள நிலையில், “5 சதவீதம் குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாகவும், அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது என தமிழக வெற்றிக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், உற்பத்தித் துறையில் முன்னிலையில் உள்ள தமிழ்நாடு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது.
இதையும் படிங்க: புதிய சட்டமன்றத்திற்கு எதிர்ப்பு..! இருப்பதை வைத்து நல்ல ஆட்சி தாங்க..! கனிமொழி எம்பி காட்டம்..!!
இத்தகைய மாநிலங்களில் ஐஜிஎஸ்டி செட்டில்மென்ட் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கிராஸ் ஜிஎஸ்ட் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ்நாட்டின் உண்மையான ஜிஎஸ்டி வருவாய் நிலையை மதிப்பிடும்போது போஸ்ட்-செட்டில்மென்ட் ஜிஎஸ்டி தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கட்சி வலியுறுத்தியுள்ளது. பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது என்றும், மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றிபெறாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? 2 இடைத்தேர்தல் முடிவை எதிர்நோக்கும் கட்சிகள்! நாளை ரிசல்ட்!