விஜய்க்கு அடுத்த தலைவலி... இளம் பெண்ணை ஈவ்டீசிங் செய்த தவெக நிர்வாகி கைது...!
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்த தவெக ஒன்றிய செயலாளர் உட்பட இருவரை திருவாரூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழகத்தில் முன்பை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் குற்றசம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சிக்கு வந்த 38 நாட்களில் 150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள், பெண்களுக்கு எதிராக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.
குறிப்பாக பெரும்பாலான பாலியல், மோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைதாகி வருவது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக முதலமைச்சர் விஜய் அமைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே? என கேள்வி எழுப்பும் அளவிற்கு செயல்பாடுகள் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண் நேற்று தனது தந்தை வருவதற்காக அங்கு காத்துக் கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24). இவர் தமிழக வெற்றி கழக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.மேலும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!
இந்த நிலையில் இவரும் இவருடைய நண்பர் அசோக் இருவரும் நேற்று இரவு திருவாரூர் பேருந்து நிலையத்தில் சென்று தனியாக நின்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவரது தந்தை வந்த உடனே தனது மகளிடம் ஈவ்டீசிங் செய்த ஆனந்தராஜ் மற்றும் அசோக் இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தில் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் அசோக் ஆகிய இருவர் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!