தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார்..! எஸ் பி அலுவலகம் முற்றுகை.. பரபரப்பு..!!
தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார் அளித்ததாக கூறி மகளிர் அணியினர் எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழக வெற்றிக்கழக பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணை கைது செய்யக்கோரி தவெக மகளிர் அணியினர் திருவள்ளுர் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பை ஏற்பட்டது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் தவெக பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளருமான பிரகாசம் என்கிற குட்டி மீது மகளிர் அணி நிர்வாகி சங்கீதா எஸ்.பி. யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இதனால் ஆறு பிரிவுகளின் கீழ் வேட்பாளர் பிரகாசம் என்கிற குட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்து வேட்பாளருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி வேட்பாளரின் மனைவி மற்றும் மகளிர் அணியினர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.
அதில் கணவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்பி இடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் சங்கீதா உள்ளிட்ட 7 பேர் மிக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்த சங்கீதா உள்ளிட்ட 7 பேரை கைது செய்யக் கோரி தவெக மகளிர் அணியினர், வேட்பாளரின் மனைவி சுகுணா மற்றும் நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!
இதனால் போலீசாருக்கும் மகளிர் அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஐந்து பேரை மட்டும் எஸ் பி அலுவலகத்தில் புகார் கொடுக்க அனுமதி அளித்தனர். வேட்பாளரின் மனைவி சுகுணா உள்ளிட்ட 5 பேரை அனுமதித்தனர். இதனால் எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!