முதன் முறையாக போராட்டக் களத்தில் விஜய்... கருப்பு நிற உடையில் பங்கேற்பு..!
அரசியல் களத்திற்கு வந்த பிறகு முதன்முறையாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளார்.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு விசாரணைக்காக அழைத்துச் சொல்லப்பட்ட போது உயிரிழந்தார். அஜித் குமாரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அஜித் குமாருக்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன. இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
தமிழக வெற்றி கழகத்தின் போராட்டத்திற்கு அனுமதி முதலில் மறுக்கப்பட்டது. வேறு தேதியிலோ அல்லது வேறு இடத்திலும் மாற்றி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்ததால் பெண் தொண்டர்கள் பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்ட களத்திற்கு விஜய் வந்தடைந்தார். இந்த நிலையில், சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக போராட்டக் களத்திற்கு வந்த விஜய், கருப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகை கைகளில் ஏந்தியபடி விஜய் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார். காவல் மரணங்களுக்கு சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்று முழக்கங்களையும் எழுப்பி உள்ளனர். மேலும் காவல் நிலைய வருடங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: சீப்பை மறைத்தால் கல்யாணம் நிக்குமா.. தவெக தொண்டர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்! கடும் குற்றச்சாட்டு..!
இதையும் படிங்க: SORRY வேண்டாம் நீதி வேண்டும்!! விஜய் தலைமையில் போராட்டம்.. குவியும் தொண்டர்கள்..!