SORRY வேண்டாம் நீதி வேண்டும்!! விஜய் தலைமையில் போராட்டம்.. குவியும் தொண்டர்கள்..!
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்காக ஏராளமான தொண்டர்களுக்கு குவிந்துள்ளனர்.
இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையும், எதிர்க்கட்சிகளின் கடும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அஜித் குமார் என்ற இளைஞர் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் விசாரணையின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இது காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும், சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் கூட இதனை உறுதி செய்தது. நீதி விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது. அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஏற்கனவே, பாஜக மற்றும் அதிமுக உள்ள கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வேறு இடத்திலும் அல்லது வேறு தேதியிலோ மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர வழக்காக எடுத்துக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக வெற்றி கழகத்தினர், போராட்டம் நடைபெறும் இடத்தில் Sorry வேண்டாம் நீதி வேண்டும் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி உள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் அத்துமீறல்...பழனி கோவில் காவலாளி அவசர கதியில் கைது! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக
இதையும் படிங்க: லாக் அப் மரணங்கள் ... உறவுகளை பறிக்கொடுத்தவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்