×
 

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி விஜய்..! இனி பஸ்ல கூட விசில் அடிக்க மாட்டாங்க..! செங்கோட்டையன் உரை..!

இனி பேருந்தில் கூட விசில் அடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் உத்திகள், தேர்தல் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் இடமாக இது அமைந்துள்ளது. இந்தக் கூட்டம் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில், ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கிய நிலையில், செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே தளபதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான் என்று தெரிவித்தார். கூட்டணிகளை தூளாக்கும் சக்தி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மட்டுமே உண்டு என்று தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுகவில் இருப்பவர்கள் தலைவர்களே இல்லை என்றும் எம்ஜிஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் இருக்கிறார் எனவும் கூறினார். மேலும், கேட்காமல் கொடுக்கும் தலைவர் விஜய் என்றும் கூறியுள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து பேசினார். இனி பேருந்தில் நடத்துனர் விசிலை பயன்படுத்தாத நிலை ஏற்படும் என்றும் காவலர்கள் விசில் பயன்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: உற்சாகத்துடன் தொடங்கிய தவெக செயல்வீரர்கள் கூட்டம்... மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை..!

வாக்காளர்கள் காதில் விசில் ஊதி விடாதீர்கள் என்றும் ஓட்டு நமக்கு முக்கியம் என்றும் கிண்டலாக பேசினார். மேலும் பேருந்து போன்றவற்றில் வயதானவர்கள் அருகில் விசில் ஊதுவது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய்..! யாருடன் கூட்டணி? பரபரப்பு அரசியல் களம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share