×
 

தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு சில இடங்கள் குறைவாக உள்ள நிலையில், கூட்டணி ஆதரவு பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் தெளிவாக, “த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு..? முதுகில் குத்தும் செயல்..! திமுக செய்தி தொடர்பாளர் அதிருப்தி..!!

முக்கியமான அரசியல் முடிவுகளை வி.சி.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே எடுப்போம். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பதிலளித்தார். இந்த நிலையில் ஆதரவு கேட்டு திருமாவளவனுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. CPI, CPM ஆகிய கட்சிகள் அவசர ஆலோசனைகளை நடத்தி வரும் நிலையில் திருமாவளவன் ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share