×
 

TVK நோட் பண்ணுங்க... விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தை மாத்திட்டாங்க!

நாகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் சூடு பிடித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் காண அலைக்கடலென தொண்டர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். திருச்சியை தொடர்ந்து அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிவிட்டார். அதிக அளவில் கூட்டம் கூடுவதால் விஜயின் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

நிபந்தனையின்றி அனுமதி வழங்க கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் விஜய்க்கு முன் வைத்தது. விஜய் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும், யாருக்கேனும் ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு என பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இழப்பீட்டை தவிர்க்க முன்பணம் செலுத்தும் வகையில் அனைத்து கட்சியினருக்குமான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதையும் படிங்க: விஜய்க்கு ஷாக்... பணத்தை டெபாசிட் பண்ணுங்க! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

இந்த நிலையில் நாளை நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், நாகையில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புத்தூர் ரவுண்டானாவில் விஜய் உரையாற்ற இருந்தார். இந்த நிலையில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தினர். தற்போது காவல்துறையினர் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் தனது உரையை நிகழ்த்த அனுமதி வழங்கி உள்ளனர். இதன் காரணமாக புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரச்சார உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: முதல்வரையே கேலி பண்ணுவீங்களா? STOP IT விஜய்! வைகோ காட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share