×
 

#BREAKING: கரூர் கொடுந்துயரம் எதிரொலி... விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு...!

கரூர் துயரச்சம்பவத்தின் எதிரொலியாக விஜய் வீட்டிற்கு பலத்தை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: #BREAKING: புஸ்ஸி ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு… தப்பவே முடியாது... அதிரடி காட்டும் போலீஸ்…!

இந்த நிலையில் கரூரிலிருந்து விஜய் சென்னைக்கு திரும்பிய நிலையில், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தினர் உள்ளிட்ட யாருக்கும் விஜய் வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் வீட்டின் வழியாக செல்பவர்களும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கரூர் துயரச் சம்பவத்தால் தனது அடுத்தடுத்த சுற்றுப்பயணத்தை விஜய் ரத்துச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: ARREST VIJAY... சுயநல அரசியலுக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? போர்க்கொடி தூக்கிய நடிகைகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share