கரூர் துயரத்துக்கு "விஜய் தான்" முதல் காரணம்... பிரேமலதா பரபரப்பு பேட்டி...!
கரூர் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே முதல் காரணம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து பிரேமலதா விஜயகாந்த் கரூருக்கு சென்றார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இந்த துயரச் சம்பவத்திற்கு முதல் முக்கிய காரணம் விஜய் தாமதமாக வந்தது என்று கூறினார். ஐந்து காரணங்களை பட்டியலிட்டு கூறிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறினார். விஜய் தாமதமாக வந்தது முதல் காரணம் என்றும் விஜய் சென்றது குறுகலான பாதை இரண்டாவது காரணம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BIGBREAKING: கரூர் துயரம்... உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்... விஜய் அறிவிப்பு...!
காவல்துறை லேசான தடியடி நடத்தியது மூன்றாவது காரணம் என்றும் கரூர் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது நான்காவது காரணம் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி வைத்த ஆம்புலன்ஸ் வந்தபோது, அதற்கு வழி விட வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட நெரிசல் ஐந்தாவது காரணம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 நிமிஷம் கரண்ட் கட்... மிதிச்சு உயிரே போச்சு... உண்மையை போட்டு உடைத்த பெண்...!