×
 

மத உணர்வை புண்படுத்திட்டாங்க... தவெக தலைவர் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார்..!

தவெக தலைவர் விஜய், பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். தவெக தலைவர் விஜய் முதலில் கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அதிகாரப்பூர்வமாக மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை அறிவித்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். தொண்டர்கள் முன்னரே குவிந்து, உற்சாகமான வரவேற்பு அளித்து விழாவை சிறப்பித்தனர். விழாவின் சிறப்பம்சமாக பாடகர் வேல்முருகன் பங்கேற்று பாடல்கள் பாடினார். அப்போது பிரபலமான முருகன் பக்திப் பாடலான "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை அவர் மாற்றி, தவெக தலைவர் விஜய்யை புகழும் வகையில் சில வரிகளை பாடியிருக்கிறார்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட பாடலுக்கு விஜய் உற்சாகமாக நடனமாடியதும் வீடியோக்களாக பரவியது. இந்நிகழ்வு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, முருகன் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் இதை முருகப் பெருமானை இழிவுபடுத்தும் செயலாகவும், பக்திப் பாடலை அரசியல் தலைவரை துதிக்கும் வகையில் திரித்து பயன்படுத்தியதாகவும் விமர்சித்தன.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்... வரும் 6 ஆம் தேதி முதல் தவெக சார்பில் விருப்ப மனு..!

இதனால் விஜய், பாடகர் வேல்முருகன், தவெக பொது செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுன் போன்றோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவர் நெல்லை போலீசில் தனி புகார் அளித்து, மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார். இந்த புகார்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.

இதையும் படிங்க: எனக்கு யாரும் எதிரி இல்ல.. விஜய் குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பளீச் பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share