×
 

களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் தின கொண்டாட்டம் களைகட்டியது.

தமிழகம் முழுவதும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) உற்சாகத்துடனும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை போற்றுவதோடு, பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தையும், இன்னும் தொடரும் சவால்களையும் நினைவூட்டும் முக்கியமான தினமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே 2026ஆம் ஆண்டிலும் மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை வருவதால், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் என அனைத்து தரப்பினரும் இந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். உலக அளவில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "Give To Gain" என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின கொண்டாட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: விவாகரத்து விஷயம்..!! விஜய் இமேஜை திமுக கெடுக்க பாக்குது... குண்டைத் தூக்கிப் போட்ட செல்லூர் ராஜு..!!

கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அல்லது QR குறியீட்டு அனுமதிச் சீட்டு கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மகளிர் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். மகளிர் தின கொண்டாட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மகளிர் காண வாக்குறுதிகளை அறிவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின கொண்டாட்டம் தொடங்கிய நிலையில், சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சிறுமிக்கு எழுந்து நின்று விஜய் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share