×
 

தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தொடர்பான தகவல்கள் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் தேர்தல் தயாரிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வரும் சூழலில், உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி விட்டதாகவும், விரைவில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது. பல மாவட்டங்களில் இருந்து கிடைத்துள்ள விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில் நேர்காணல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நேர்காணல்களை விஜய் தானே நேரடியாக மேற்கொள்ள உள்ளார் என்பது முக்கியமான தகவலாக உள்ளது.

இதன்மூலம், கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றக்கூடிய, தூய்மையான மற்றும் உழைப்பாளி வேட்பாளர்களைத் தேர்வு செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே சில தொகுதிகளுக்கான உத்தேச பெயர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

சென்னை உள்ளிட்ட நகர்ப்புறத் தொகுதிகள், தென் மாவட்டங்கள், மேற்கு தொகுதிகள் என பல இடங்களில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதும் மக்களிடையே ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்களின்படி, சென்னை பகுதியில் உள்ள ஒரு தொகுதியை அவர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்றாலும், இறுதி முடிவு நேர்காணல் மற்றும் கட்சி ஆலோசனைக்குப் பிறகே உறுதியாகும்.

இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share