புதுச்சேரி மக்களே..! விழிப்புடன் வாக்களியுங்கள்..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!!
விழிப்புடன் வாக்களிக்க வேண்டும் என புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் யானம் பகுதிகளை உள்ளடக்கிய 30 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நீடிக்கும். மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, இதில் 209 வாக்குச்சாவடிகள் பாதிப்புக்குரியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சுமார் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 294 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்கும் வகையில் வாக்களித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை புதுச்சேரியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. நேயம் மக்கள் கழகம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 28 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்கு செலுத்தும் நேரம் சில மணி நேரங்களில் முடியை இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சீமான் களமிறங்கிய காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்..! அனுமதி கொடுத்த போலீஸ்..!!
புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வாக்குப்பதிவு முடிய சில மணி நேரமே உள்ளதால் விழிப்புடன் வாக்களியுங்கள் என்றும் கடைசி மணித்துளி வரை வாக்களிக்கலாம் என்றும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் கடலூர் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்! புதுச்சேரி தேர்தலால் அனுமதி மறுப்பு!