சூறாவளி பிரச்சாரம்...! சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!
சென்னையில் விஜய் என்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், விஜய் பிரச்சாரம் இல்லத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் 15.04.2026 புதன்கிழமையான இன்று சென்னை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. சென்னை, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணி முதல் வாகனத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்தி
இதையும் படிங்க: “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!
டம் அனுமதி பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!