×
 

இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

திருப்பூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது,

காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கான அறிவிப்புகளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்டார். அரசு ஊழியர்களின் நலனுக்காக பழவைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து நமது TVK அரசு பணிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யும்.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பணியை நிறைவு செய்துள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்களுக்கும் செவிலியர்களுக்கும் மற்றும் எழுத்தர் பணியாளர்களுக்கும் நமது TVK அரசு பணி நிரந்தரம் செய்யும். பதவி உயர்வுக்கு பணம் பெரும் கலாச்சாரத்தை நமது TVK அரசு முடிவுக்கு கொண்டு வரும். அனைத்து அரசு ஊழியர்களின் இட மாற்றங்களும் வெளிப்படையான மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இதையும் படிங்க: "சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!

காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை ரூ. 18,200 இல் இருந்து 25,000 ரூபாயாக நமது டிவிக்கு அரசு உயர்த்தும். அதிகமான அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு படிப்படியாக மாதம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தை (போலீஸ் வெல்பர் அண்ட் வொர்கிங் கண்டிஷன் ஆக்ட்) நமது TVK அரசு இயற்றும். சட்டத்தின் படி காவலர்களின் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும். 

அதிக பணி சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறையில் விடுமுறையை உறுதி செய்யப்படும். சலவை படியை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர்கள் நல மருத்துவமனைகள் நிறுவப்படும். பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள். பெண் காவல்துறை பணியாளர்களுக்கு என தனி ஓய்வறைகளும், நடமாடும் டாய்லெட் யூனிட்டுகளும் அமைக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். 

நீங்க எல்லோரும் இந்த விஜய்யை 100% நம்பலாம் என்றும் நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன் எனவும் உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே வந்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார். போய் வாக்குறுதிகள் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதனால் உங்கள் அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கை கூப்பி கேட்டுக் கொண்டார். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருப்பூரில் விஜய்..! சிறு குறு தொழில்கள், நெசவாளர்களுக்கான மாஸ் வாக்குறுதிகள் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share