"சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!
திருப்பூரில் நடத்திய பரப்புரையின் போது விஜய் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை கொடுத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் மக்களே, வரும் 16ஆம் தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட இருப்பதாக தெரிவித்தார். அதற்கு முன்னதாக சில வரிகளை இங்கு கூற இருப்பதாகவும் தெரிவித்தார்.
நெசவாளர்கள் சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தமான நம்முடைய வாக்குறுதிகளை கூறுவதாக தெரிவித்தார். நம் அனைவருக்கும் சோறு போடும் தெய்வங்களான விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் என்று குறிப்பிட்டு விஜய் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்தார். ஐந்து ஏக்கருக்கு குறைவான உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எம்.எஸ்.வி சட்டப்பூர்வ உத்திரவாதம் வழங்கப்படும் நெல்லுக்கு ஒரு குவின்டாலுக்கு 3500 ரூபாயும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு நான்காயிரத்து ஐநூறு ரூபாயும் வழங்கப்படும்.
இதையும் படிங்க: திருப்பூரில் விஜய்..! சிறு குறு தொழில்கள், நெசவாளர்களுக்கான மாஸ் வாக்குறுதிகள் அறிவிப்பு..!!
உழவர்களின் தோழன் திட்டத்தின் படி குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் அவர்களின் நேரடி வங்கி கணக்குக்கு ஆதரவு தொகையாக வழங்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் படி பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று விஜய் தனது பரப்புரையின் போது அறிவித்தார். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினருக்கான அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: வாட்டி எடுக்கும் வெயில்..! விஜய்க்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் மயக்கம்..!!