×
 

தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

முதலமைச்சர் ஸ்டாலின் தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக் கொண்டதாக விஜய் விமர்சித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் பரப்புரை செய்கிறார். அதைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக் கொண்டார். இது தொடர்பான முழு அறிவிப்பை தலைமை கழகம் வெளியிட்டது. ஒய் எம் சி எம் மைதானத்தில் நடந்த கழக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பொய் வாக்குறுதிகள் கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை மட்டும் உயர்த்திக் கொண்டதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் குப்பை வரி வீட்டு வரி குடிநீர் வரி என அனைத்து வரிகளும் உயர்ந்துவிட்டது. அரசியலை எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

தனது வாழ்க்கையை மட்டும் உயர்த்தி கொண்ட தமிழகம் முதல்வர் தமிழ்நாட்டை கடன் சுமையில் தள்ளி விட்டதாக குற்றம் சாட்டினார். ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒரே கூட்டணிகள் இருப்பதால் தன்னை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். திமுக, பாஜக மற்றும் பலரும் வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: உங்க சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டனா.? கரூர் சம்பவம் குறித்த மனம் திறந்த விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share