×
 

விஜய்க்கு ஒரு எம்எல்ஏ சீட் கூட தேறாது..! அடித்துக் கூறிய விசிக MP ரவிக்குமார்..!!

விஜய் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ சீட் கூட கிடைக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி mp ரவிக்குமார் தெரிவித்தார்.

2009-இல் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம், முதலில் சமூக சேவை மையமாக செயல்பட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தலைமையிலான கூட்டணியை ஆதரித்து, அக்கட்சியின் அமைப்பு வலிமையைப் பெற்றது. ஆனால் உண்மையான தேர்தல் சோதனை 2021 உள்ளூர் உடனடி தேர்தல்களில் வந்தது. விமி, சுயேத்தியாக 169 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்றது.

இது விஜயின் ரசிகர்களின் வாக்குச் சக்தியை நிரூபித்தது மட்டுமின்றி, த.வெ.க-வின் எதிர்காலத் தேர்தல் உத்திகளுக்கு அடித்தளமிட்டது. இந்த வெற்றி, கிராமப்புற மற்றும் இளைஞர் வாக்காளர்களிடம் விஜயின் ஈர்க்கத்தை வெளிப்படுத்தியது, அது தற்போது த.வெ.க-வின் தேர்தல் இயந்திரத்தின் முதன்மை ஆகாரமாக உருவெடுத்துள்ளது.2024 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட த.வெ.க, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், ஆதரவும் அளிக்காமல் இருக்கும் என விஜய் தெளிவாக அறிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முழுமூச்சாக கொண்டு அதற்காக தீவிர முயற்சிகளை தமிழக வெற்றி கழகம் மேற்கொண்டு வருகிறது. கட்சி ஆரம்பித்து முதல் தேர்தல் என்பதால் பலத்தை நிரூபித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் அரசியலில் புதிய அலை எனவும் பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் விஜயால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் அண்ணா WELCOME..!! திருச்சி TO தஞ்சை பயணம்... பூமழை பொழிந்து தொண்டர்கள் உற்சாகம்..!!

இந்த நிலையில், விஜய் அரசியல் வருகை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் படுதோல்வி அடைவார் என்று தெரிவித்தார். ஒரு இடத்தில் கூட அவரின் கட்சி வெற்றி பெறாது என்றும் 2026 தேர்தலில் ஒரு எம்எல்ஏ கூட விஜய் கட்சி சார்பாக இடம் பெறப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு விஜய் என்ற மாயை விலகிவிடும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: எனக்குன்னே வருவீங்களா டா?... விசிலடிச்சான் குஞ்சுகளால் விஜய்க்கு வந்த வினை... தவெகவை பொளந்தெடுத்த பத்திரிகையாளர் மன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share