×
 

உழைப்புக்கு இதுதான் சன்மானமா? விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர்... பனையூரில் பரபரப்பு...!

பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தமிழக வெற்றி கழகத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர் பதவியை கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் இருந்த தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது திருச்சியில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் காலியாக உள்ள பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண் பொறுப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பெண் தொண்டர்கள் அதிருப்தியில் பனையூருக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக பெண் பவுன்சர்கள் பனையூரில் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து அஜிதா ஆக்னல் என்ற தற்போதைய தூத்துக்குடியின் நிர்வாகியின் பெயர் லிஸ்டில் இல்லை என்ற தகவல் வெளியானதாக தெரிகிறது. இதனால் பனையூர் அலுவலக வளாகத்தில் கண்ணீருடன் பெண் நிர்வாகி காத்துக்கொண்டு இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: எவ்ளோ உழைச்சிருக்கோம்...! இதெல்லாம் நியாயமா? பனையூரில் கண்ணீருடன் முறையிட காத்திருக்கும் பெண் நிர்வாகி...!

இன்று பொறுப்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தி விஜயின் காரை கட்சி அலுவலகத்திற்குள் செல்ல வைத்தனர். மெதுவாக மோதி தள்ளியபடி கார் சென்றது. தனக்கு பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி அஜிதா ஆக்னல் மன வருத்தத்துடன் கண்ணீர் சிந்தினார். 

இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... முக்கிய ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share