சென்னை திரும்பினார் விஜய்! அத்துமீறிய பவுன்சர்கள்.. பதற்றத்தில் ஏர்போர்ட்..!
படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்த தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் என்று சென்னை திரும்பினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக விஜய், மே 1ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக கொடைக்கானலுக்கு சென்றார். தாண்டிக்குடி முழுவதும் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் விஜயை பார்ப்பதற்காக குவிந்தனர். படப்பிடிப்பு முடிந்து விஜய் மீண்டும் தனியார் விடுதிக்கு செல்லும் வழியில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். விஜய் ரோடு ஷோ நடத்தியதை காண ஏராளமானோர் குவிந்ததுடன் மாலை, பூக்கள் தூவி வரவேற்றனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து மதுரையில் இருந்து விமான மூலம் விஜய் சென்னைக்கு திரும்பினார். ஏற்கனவே விஜய் மதுரைக்கு செல்லும் போது ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். குறிப்பாக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 2026-ல் டீ விக்க தான் போறாங்க.. திமுக கூட்டத்தில் தவெகவை கிண்டலடித்த லியோனி!
இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வருவதற்கு முன்பே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே விமான நிலையத்திற்குள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். விஜய் சென்னைக்கு திரும்பும் போது பவுன்சர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
விஜயை படம் எடுக்க முயன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பவுன்சர்கள் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், விஜய் விமான நிலையம் வந்த போது அவரது ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த முறை நடந்த கூட்ட நெரிசல் மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வாட் ப்ரோ..? இ- பாஸ் பரிசோதனையை தவிர்த்த விஜய்... 'அணில்' போல தாவிய தொண்டர்கள்..!