×
 

#BREAKING: அரங்கம் அதிர மதுரையில் விஜய்… சிறப்பு பாடலுடன் மாஸ் என்ட்ரி! குதூகலத்தில் தொண்டர்கள்..!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு பாடல் ஒலிக்க வருகை புரிந்தார்.

தமிழக வெற்றி கழகம் 2024 பிப்ரவரி 2 அன்று நடிகர் விஜயால் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் முதன்மையாக செயல்படும் இந்தக் கட்சி, 2026-ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரும்பப்படும் அடிப்படை அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

 TVK-ன் தோற்றத்திற்கு முன்னோடியாக, விஜய்யின் ரசிகர் அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் 2009 முதல் பொது நலப் பணிகளிலும், உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது.

 2021 உள்ளாட்சித் தேர்தலில் இந்த இயக்கம் 170 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்று, தனது அரசியல் திறனை நிரூபித்தது.TVK-ன் முக்கிய நோக்கம், ஊழல் மற்றும் பிளவுவாத அரசியலுக்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்த, ஒற்றுமையை மையப்படுத்திய அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். 

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. 

லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். காலை முதலே தொண்டர்கள் புதிய தொடங்கினர். மூன்று மணி அளவில் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது. விஜயின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். தொடர்ந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடல் ஒலிக்க விஜய் விழாமடைக்கு வந்தார். விஜயை கண்டதும் ஆரவாரத்தில் முழக்கங்களை எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மாநாட்டின் மேடைக்கு வந்த விஜய் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து வரவேற்றார்.  தொடர்ந்து மதுரை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களுக்கு கைகளை அசைத்தவாரும், தொண்டர்கள் தூக்கி எறியும் கட்சி துண்டுகளை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டும் தலையில் கட்டியும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: பக்கா பிளான்! மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன்... தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share