×
 

டிசைன் டிசைனா யோசிக்கிறாங்கயா… விஜய் CM ஆக வேண்டும் எனக் கூறி சென்னை வரை பாதயாத்திரை வந்த ரசிகர்…!

விஜய் முதலமைச்சராக வேண்டும் எனக்கூறி ஆந்திர முதல் சென்னை வரை ரசிகர் ஒருவர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. 

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. மக்கள் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. விஜய் அரசியல் வருவதற்கு முன்பாக கல்வி விருதுகள் வழங்கும் விழாவை தொடங்கிய நடத்தி வருகிறார். இளைய பட்டாளத்தின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மதுரையில் நடந்த மாநாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்றிணைந்து நிலையில், 2026 தேர்தல் களம் விஜய்க்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியது. இருப்பினும் விஜய் அரசியல் பிரவேசம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: சீமான்... அந்த அணிலு? செல்வப் பெருந்தகை கேள்வியால் சிரிப்பலை...!

விஜய் தற்போது தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் விஜய்க்கு அமோக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் எனக் கூறி ஆந்திரா முதல் சென்னை வரை விஜய் ரசிகர் ஒருவர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: நல்லாருக்கு உங்க நியாயம்! இதுக்கு திமுக காரங்க மேல CASE போட்டீங்களா? வலுக்கும் விமர்சனங்கள்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share