×
 

நம்ப வைத்து ஏமாத்துறது தான் திமுகவின் வேலையே... WARNING கொடுத்த விஜய்...!

நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.

புதுச்சேரி உப்பளத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், புதுச்சேரி அரசை புகழ்ந்து பேசினார். இதனை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு பாரபட்சம் காட்ட வில்லை என்றும் கூறினார். தமிழ்நாடு போலவே புதுச்சேரியிலும் 30 ஆண்டுகளாக மக்கள் தன்னை தாங்கி பிடித்துள்ளதாக விஜய் கூறினார். சிறப்பான பாதுகாப்பு அளித்த முதல்வருக்கு தனது மனமார்ந்த நன்றிகள் என்று விஜய் கூறினார். இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வரும் தேர்தலில் 100 சதவீதம் திமுகவினர் கற்றுக் கொள்வார்கள் என்றும் விஜய் தெரிவித்தார். தமிழக அரசை போன்றது பாண்டிச்சேரி அரசு அல்ல என்றும் கூறினார். திமுகவை நம்பாதீர்கள் என்றும் நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் வேலை எனவும் விமர்சித்தார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று கூறிய விஜய், 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை என்றும் விஜய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி கூட உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் காரைக்கால், ஏனாம், மாஹேவில் முன்னேற்றம் இல்லை எனவும் சுற்றுலாத்தலமான புதுவையில் பார்க்கிங் மற்றும் கழிவறை வசதி கூட இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன்., தொண்டர்கள் புடை சூழ விஜய் உரை…!

ஒரு அமைச்சர் ஊழல் புகாரி சிக்கி நீக்கப்பட்டு வேறு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாளாகியும் பதவி தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மதிய நிதி குழுவில் இடம் பெறவில்லை என்றும் போதிய நிதி வரத்து இல்லாததால் புதுச்சேரிக்கு வெளியில் இருந்து கடன் வாங்கிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி கடனை குறித்து பொருளாதாரத்தை வளர்க்கப் போதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய விஜய் இந்திய அளவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... புதுவையில் புஸ்ஸி ஆனந்த் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share