கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!
தவெக தலைமையிலான கூட்டணி திமுக பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று செயற்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் ஒருமனதாக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் முதல் வாரம் முதல் தமிழக முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து செயற்குகு கூட்டத்தில், விஜய் உரையாற்றினார். அப்போது, தவெக தலைமையிலான கூட்டணி திமுக பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவின் விஷமத்தனமான செயல்கள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றி கழகம் ஒன்றும் திமுக, அதிமுக இல்லை எனவும் கூறினார். திமுகவையும் பாஜகவையும் எதிர்த்து தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் என்றும் இது இறுதியான தீர்மானம் அல்ல உறுதியான தீர்மானம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!
தொடர்ந்து பேசிய அவர், பரந்தூர் மக்கள் தொடர்பாகவும், அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்கள் கடிதம் எழுதி இருந்ததாகவும், அந்த கடிதத்தில் பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புது விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதி மக்கள், விவசாயிகள் வருட கணக்கில் போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.
பரந்தூர் மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பரந்தூர் விமான நிலையம் பகுதியில் அமையாது என்ற உறுதி அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில், பரந்தூர் மக்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து தங்களை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மக்களின் முதல்வர்-னு சொல்ல நாக்கு கூசலையா? தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்.. எச்சரித்த விஜய்..!