×
 

சாட்டையை சுழற்ற தயாராகும் விஜய்... இனி தவெக மா.செ.க்களுக்கு தினம் தினம் அதிரடி...!

புதிய வார் ரூம் ஒன்றை அமைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Vij

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சந்தித்த கையோடு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீண்டும் முழு வீச்சில் அரசியல் களத்திற்கு திரும்பி உள்ளார். திமுகவை வெளுத்து வாங்கும் விதமாக அறிக்கைகளை வெளியிடுவது, தேர்தலுக்கான சின்னத்தை இறுதி செய்வது, கட்சி நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு நிர்வாக குழுவை ஏற்படுத்தியது என முழு வீச்சு எங்கு வருகிறார். 

கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதத்திற்கும் மேலாக விஜய் அமைதி காத்து வந்ததால் அவர் கட்சியைக் கலைக்கப் போவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்க உள்ளதாகும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தவெக தலைவர் விஜய் திமுக Vs தவெக இடையில் தான் போட்டி என பகிரங்கமாக அறிவித்ததுடன், அதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.

பனையூரில் இருந்து கொண்டு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்தால் இனியும் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்ட விஜய், திமுக அதிமுக தலைவர்களைப் போல் நேரடியாக களத்தில் இறங்கி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...!

2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக வெற்றி கழகம் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் தேர்தல் பணிகளுக்காக புதிய வார் ரூம் ஒன்றை அமைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

80 பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வார் ரூம் மூலம் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய கட்சிப் பணிகளை விஜய் நேரடியாக கண்காணிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக சட்டமன்ற தேர்தலை நோக்கி பூத் கமிட்டி அளவில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பணிகளையும் மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய பணிகளை விஜய் நேரடியாக இந்த வார் ரூம் மூலம் கண்காணிப்பார் என்று சொல்லப்படுகிறது. 

மேலும் மண்டல பொறுப்பாளர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வகையிலும் இந்த வார் ரூம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

 பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கக்கூடிய வகையிலும் அவர்களது பணிகளை தினமும் ரிப்போர்ட் செய்யும் வகையிலும் பிரத்தியேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இந்த வார் ரூமிற்கு அடிக்கடி வந்து விஜய்யே நேரடியாக கண்காணிப்பார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு விசில் சின்னம்? தேர்தல் ஆணையத்தை நாடும் தவெக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share