×
 

சத்தம் பத்தாது விசில் போடு...! பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் வழங்கி புஸ்ஸி ஆனந்த் குஷி..!

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், மாநில செயலாளர் ஆனந்த் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் விசில் வழங்கினார்

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. நடிகர் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி 2024 பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட பின்னர், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடத் தயாராகி வருகிறது.

இந்நிலையில், கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என கடந்த 2025 நவம்பர் 11-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையான மனு அளிக்கப்பட்டது.தேர்தல் ஆணையம், Election Symbols (Reservation and Allotment) Order, 1968-இன் விதிகளின்படி, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொதுச் சின்னங்களை ஒதுக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தியது.

தவெக சார்பில் 10 சின்னங்கள் விருப்பப்பட்டியலாகக் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்றவை அடங்கியிருந்தன. இதில் விசில் சின்னத்தை விஜய் தனிப்பட்ட முறையில் முன்னுரிமை அளித்திருந்தார் எனக் கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING : தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

இந்த விருப்பத்தை கருத்தில் கொண்டு, 2026 ஜனவரி 22-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விசில் சின்னத்தை தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதன்மூலம் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடியும். இது கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் நிலையில், முதல் தேர்தலிலேயே ஒரே சின்னம் கிடைத்தது மிகப் பெரிய சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்த நிலையில் அக்கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் நீலாங்கரையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் ஆனந்த் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் விசில் வழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஆட்டோ மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி குஷியை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: அனல் தெறிக்கும் அரசியல் களம்... யாருடன் கூட்டணி? ஜன. 25ல் தவெக செயல்வீரர்கள் கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share