ஆட்சி அமைக்கணும்..! எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை..! பனையூருக்கு புறப்பட்ட விஜய்..!!
எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பனையூர் அலுவலகத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன.
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பாக்காத வகையில் மாபெரும் வெற்றியை தனித்து நின்று பெற்று இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் பத்து சீட்டுகள் தேவைப்படுகின்றன. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!! திருச்சி கிழக்குக்கு புதிய வேட்பாளர்! மீண்டும் தேர்தல்!!
காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பதவி ஏற்பு விழாவிற்கு எந்த இடத்தை தேர்வு செய்வது, நிகழ்ச்சி ஏற்பாடு குறித்தும் தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் எம்எல்ஏக்களுடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக தனது வீட்டில் இருந்து பனையூர் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தனி பெரும் கட்சியாக வெற்றி..! தவெக தலைவர் விஜய்க்கு ப.சிதம்பரம் வாழ்த்து..!