அண்ணாமலையார் கோயிலில் அராஜகம்... விஜய் போட்டோவுடன் தவெகவினர் செய்த காரியத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் அண்ணாமலையார் திருக்கோவிலில் முதல்வர் விஜயின் படத்தை வைத்து வழிபட்டதால் சர்ச்சை.
கோவில் நிர்வாகம் பலமுறை தமிழக முதல்வரின் படத்தை அப்புறப்படுத்திய நிலையிலும் தவெக நிர்வாகிகள் மீண்டும் மீண்டும் கோவிலுக்குள் முதல்வரின் படத்தை கொண்டு வந்து புகைப்படம் எடுத்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் வருகின்ற 22 ஆம் தேதி அக் கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் கே. பாரதிதாசன் தலைமையில் இன்று அக்கட்சியினர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தவெகவினர் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த நிலையில் சாமிக்கு முன்பாக கொடி மரத்தின் அருகில் தமிழக முதல்வரின் படத்தை வைத்து அக் கட்சியினர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!
தொடர்ந்து தங்கத்தேரில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் எழுந்தருள ஜோசப் விஜய் படம் மீண்டும் தங்கத்தேரின் முன்பாக கொண்டுவரப்பட்டு இந்த கட்சியினர் புகைப்படம் எடுக்கும் வேளையில் சுதாரித்துக் கொண்ட கோவில் நிர்வாகிகள் உடனடியாக படத்தை அப்புறப்படுத்த சொன்னதின் பெயரில் அங்கிருந்து அந்த படம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அக்கட்சியினர் தங்கத்தேர் முழுமையாக இழுத்து வந்து நிலையை அடைந்தவுடன் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அண்ணாமலையார் திருக்கோவில் பிரசாதம் வழங்கப்படுவதற்கு முன்பும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் படம் மீண்டும் அந்த இடத்திற்கு வந்த நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகிகள் அதனை அப்புறப்படுத்த சொன்னதின் பேரில் தமிழக முதல்வரின் படம் அப்புறப்படுத்தி பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் அந்த படத்தைக் கொண்டு வந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பிறந்த நாளின் பொழுதும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் நலம் பெற வேண்டி அதிமுகவினர் பலரும் அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபட்ட நிலையில் அவரது புகைப்படம் உள்ளே வராமல் அண்ணாமலையாரை வேண்டிய தங்கத்தேர் எடுத்தனர் பல்வேறு அபிஷேக ஆராதனைகளை செய்தனர்.
ஆனால் முதல் மறையாக வெற்றி பெற்று தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ள தவெக அரசு முதல்வர் ஜோசப் விஜயின் படத்தை அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் கொண்டு வந்து அண்ணாமலையாருக்கு முன்பாக புகைப்படத்தை வைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகள் திருக்கோவிலுக்கு வந்திருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!