பெருஞ்சோகம்...!! - விருந்துக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்... நண்பர்கள் இருவர் துடிதுடித்து பலி...!
உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு சென்ற இரு நண்பர்கள்... காவிரி ஆற்றின் நீரில் மூழ்கி பலியான சோகம். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இருவரை போலீசார் சடலமாக மீட்டெடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்ககிரி அருகேயுள்ள தேவூர் புள்ளா கவுண்டம்பட்டி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் நீரில் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தேவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் சங்ககிரி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நீரின் ஆழமான பகுதியில் மிகுந்த இரு சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது காவிரி ஆற்றின் கரையில் இறந்தவர்களின் உடமைகளை சோதனை செய்த பொழுது ஒரு செல்போன் இருந்தது அதிலிருந்த எண்களுக்கு தொடர்பு கொண்ட பொழுது உறவினர்கள் போனை எடுக்காததால் இறந்தவர்கள் யார் என விசாரணை செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து சங்ககிரி காவல் ஆய்வாளர் ஜமுனா தீவிர விசாரணை மேற்கொண்டபோது இறந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள எலச்சி பாளையம் பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்த நேபாளத்தை சேர்ந்த தீரஷ்குமார்(56) என்பதும், திருச்செங்கோட்டில் பானி பூரி கடையில் பணிபுரிந்து வரும் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: வெள்ளியங்கிரி மலையேற்றம்... மூச்சுத் திணறி பக்தர் உயிரிழந்த சோகம்..!!
இருவரும் நண்பர்கள் என்பதால் புள்ளா கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சக்திவேல் உறவினர் கோவிந்தராஜ் வீட்டிற்கு விருந்துக்கு சென்றவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் பிரத பரிசோதனை செய்து இரு சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் இரு ஆண் சடலங்களை போலீசார் மீட்டெடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!