×
 

வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும் என்றும் வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த SOFA MODEL ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் என்றும் சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது, சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை., இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.

ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும் என்றார். இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share